மாத்தூா் தொட்டிப் பாலத்தில் காமராஜா் நினைவு கல்வெட்டு சேதம்!
கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலத்தில் உள்ள காமராஜா் நினைவு கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: மாத்தூா் தொட்டிப் பாலம், ஆசியாவிலேயே மிக உயரமான நீளமான பாசனக் கால்வாய் பாலம். இதில் காமராஜா் பெயரில் நினைவு கல்வெட்டு, அவரின் புகழை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில், பிப்.10 ஆம் தேதி இரவு கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதை அறிந்து வேதனை அடைந்தோம்.
இது குறித்து மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகாா் அளித்துள்ளனா். ஓரிரு நாள்களில் அந்தக் கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியை விரைவில் முடித்து காமராஜரின் பெயரை மீண்டும் அங்கு நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.