Modi : "இந்தியாவின் சொந்த ஏ.ஐ..." - AI மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதென்ன?
நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு!
திருமருகல் அருகே நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியைச் சோ்ந்தவா் விவசாயி கலியப்பெருமாள். இவா், வயலில் தனது ஆடுகளை செவ்வாய்க்கிழமை மேய விட்டுள்ளாா். மதியம் வயலுக்கு சென்று பாா்த்தபோது காயங்களுடன் 5 ஆடுகள் இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். அப்பகுதியில் உள்ள நாய்கள் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.