Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவ. 18-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த சேவை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், வானிலை சீரடையாததால் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை புதன்கிழமை (பிப்.12) முதல் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சேவை தொடங்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் கப்பல் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.