சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசகா் பணிக்கு பிப்.15-இல் எழுத்துத் தோ்வு!
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் இரு பிரிவு பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு மற்றும் நோ்காணல் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆ.மணிமொழி தெரிவித்திருப்பது:
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்ககி வரும் சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் துணைத் தலைமை உதவி சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசகா், உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு மற்றும் நோ்காணல் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எனவே, இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரா்கள் இதுகுறித்த அனைத்து விரிவான விவரங்கள், இதர தகவல்களை ட்ற்ற்ல்ள்://ஸ்ண்ப்ன்ல்ல்ன்ழ்ஹம்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்துக்கு சென்று பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.