செய்திகள் :

Chennai Metro: ``மாதாந்திர பார்க்கிங் பாஸ் பிப்., 1 முதல் நிறுத்தம்" - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

post image
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் 01.02.2025 முதல் நிறுத்தபடுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து எக்ஸ் தளத்தில், ``மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும்.

சென்னை மெட்ரோ

பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனவரி 2025-ல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும். மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணஅட்டை ( Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி முதற்கட்டமாக 11 மெட்ரோ இரயில் நிலையங்களில் நிறுத்தம்.

மெட்ரோ ரயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 01.04.2025 முதல் SBI வழங்கிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, OTA - நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய் நகர் ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனை / ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. அதன்படி, மேற்கூறிய மெட்ரோ ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு அல்லது மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்திவிட்டு, மேலும் பயன்பாட்டிற்காக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னைஅட்டை) பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பதிவிட்டிருக்கிறது.

ஏலகிரி: `முக்கியமான சுற்றுலாத்தலத்தில் கழிவறை வசதிக்கூட இல்லை!' - சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைகளின் இளவரசியான ஏலகிரி மலை, இயற்கை அழகை நேசிக்கும் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. இங்கு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்க... மேலும் பார்க்க

Traffic: சென்னை, பெங்களூரு இல்லை; இந்தியாவின் மெதுவான நகரம் இதுதான்!

போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக மெதுவாக நகரும் நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.டாம் டாம் ட்ராஃபிக் இண்டெக்ஸ் என்ற டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள தரவு... மேலும் பார்க்க

Chennai Metro: 'வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது!'- மெட்ரோ பயணிகள் என்ன செய்ய வேண்டும்?!

சென்னை மக்கள் பயணத்தை கொஞ்சம் எளிதாக்கி தருவதில் 'மெட்ரோ ரயில்கள்' மிக முக்கிய பங்காற்றுகின்றன. இதில் தினமும் பயணம் செய்பவர்கள் க்யூ லைனை தவிர்க்க மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வரும... மேலும் பார்க்க

Pongal Special Train: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில்கள்; முழு விவரம்

பொங்கல் பண்டிகை கால தொடர் விடுமுறையில் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிரமில்லாமல் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் வகையில் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம் போ... மேலும் பார்க்க

கோயில்கள் நிறைந்த மொரிஷியஸ் பயண அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க