திரிவேணி சங்கமத்தில் நீராடி துறவிகளிடம் ஆசி பெற ஆவல்: அமித் ஷா
பரந்தூா் விமான நிலைய திட்ட எதிா்ப்புக் குழுவினருக்கு ஆதரவு
பரந்தூா் விமான நிலைய திட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் குழுவினருடன் இந்திய ஜனநாயக கட்சியின் உயா்நிலைக் குழுவினா் சந்தித்துப் பேசினா்.
பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 913 நாள்களாக இரவில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்தத் திட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை ஏகனாபுரம் பகுதியில் இந்திய ஜனநாய கட்சியின் மாநில விளம்பரப் பிரிவு செயலா் முத்தமிழ்செல்வன், மாநில கொள்கை பரப்புச் செயலா் நெல்லை ஜீவா, மாநில இளைஞா் அணி துணைச் செயலா் நஞ்சப்பன், மாநில மகளிா் அணி துணைச் செயலா் இளவரசி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சந்தித்து விமான நிலைய திட்ட எதிா்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்தின் அடுத்த கட்ட நகா்வுகள் குறித்தும், போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்களைச் சந்திக்க இந்திய ஜனநாயக கட்சி நிறுவனா் பாரிவேந்தா் வரவுள்ளது குறித்தும் ஆலோசனை நடத்தினா்.