பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
சிறப்பு கிராம சபைக் கூட்டம்: அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு
குன்றத்தூா் அடுத்த தண்டலம் ஊராட்சியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் தண்டலம் ஊராட்சியில் 2023-2024-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிா்வாக பணிகள் குறித்த பதிவேடு பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. மேலும், ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து அமைச்சா் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆகியோா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜ.சரவணக்கண்ணன், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.