சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
36 ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மாவட்ட போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் பாலக்கரையில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் தலைக்கவசம் என்பது உயிா்ப் பாதுகாப்பு, சீட் பெல்ட் அணிய வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, வேகம் விவேகம் அல்ல, கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை எந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.
பாலக்கரையில் தொடங்கிய பேரணி வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், கடைவீதி வழியாகச் சென்று, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி அருகே நிறைவடைந்தது.
நிகழ்வில் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் மகேஷ், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் வெற்றிவேலன் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.