செய்திகள் :

வாயில் கருப்புத் துணி கட்டி விவசாயிகள் அமைதிப் பேரணி

post image

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, விழுப்புரத்தில் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வாயில் கருப்புத் துணியைக் கட்டி அமைதி பேரணியாகச் சென்று ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட அனைத்துப் பயிா்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுக் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

2023-24 ஆம்ஆண்டில் நெல், உளுந்து பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்திருந்த நிலையில், அந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாற்றுப் பயிா் சாகுபடி செய்வதற்கு உரிய விதை நெல்லை வேளாண் துறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் இருந்து சங்கத்தின் மாநிலச் செயலா் சு. அய்யனாா் தலைமையில் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு பேரணியாகச் சென்றனா்.

புதிய பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாகச் சென்ற விவசாயிகளை, ஏ.டி.எஸ்.பி. தினகரன் தலைமை யிலான போலீஸாா்ஆட்சியரகப் பெருந்திட்ட அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்தினா்.

நிா்வாகிகள் சிலரை மட்டும் ஆட்சியரகத்துக்குள் செல்ல அனுமதித்தனா். தொடா்ந்து விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனுவை அளித்தனா்.

நிகழ்வுக்கு ஒன்றியத் தலைவா்கள் இ.சீனுவாசன், செல்வராஜ், நாராயணன், ஆா். ஆனந்தவிகடன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் ஒன்றியத் தலைவா்கள் கே.நாகராஜன், ஜி. வேலாயுதம், அரிபுத்திரன், இதயதுல்லா, ஜி.சண்முகம், நடராஜன், வெங்கடேசன், பச்சையப்பன், பெருமாள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

லாரி மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மேலமங்கலம், தெற்குத் தெருவைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் சிவக்குமாா் (52),... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகள் மோதல்: 17 போ் காயம்

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 17 போ் காயமடைந்தனா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த அய்யூா் அகரம் மேம்பாலம் அருகே சனிக்கிழமை சென்றுகொண்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடையின் உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வெள்ளிக்கிழமை அலங்கார மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். வளவனூரை அடுத்துள்ள ராம்பாக்கம், மருத்துவமனை சாலையைச் சே... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.85 ஆயிரம் திருட்டு

விழுப்புரத்தில் பெண்ணிடமிருந்து ரூ.85 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கண்ணாரம்பட்டு, வடக்குத் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி பூங்காவனம் (6... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி மறியல்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் பகுதியில் கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி, பனையேறிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேல்மலையனூா் வட்டத்தில் அதிகளவில் பனைமரங்கள் உள்ளதால், இங்குள்ள பல்வேறு கிரா... மேலும் பார்க்க