Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
கஞ்சாவை கடத்திய தாய், மகள் கைது
மதுரை மாவட்டம், எழுமலை அருகே 24 கிலோ கஞ்சாவை கடத்தியதாக தாய், மகள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
எழுமலை அருகே சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக எழுமலை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுமலை அருகே உள்ள கோடங்கிநாயக்கன்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கோடங்கி நாயக்கன்பட்டி மயானம் அருகே இரு பெண்கள் தலையில் மூட்டைகளுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் சென்றனா்.
அவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தி விசாரணை நடத்தினா். விசாரணையில், கோடங்கிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மேகலா(42), அவரது மகள் சரண்யா(20) என்பதும், இருவரும் மூட்டைகளில் 24 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.