Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
பைக் மீது வேன் மோதி ஒருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக் மீது வேன் மோதியதில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.
வானூா் வட்டம், அருவாப்பாக்கத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ரமேஷ் (45). காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன் குமாா் (50), உப்புவேலூா் எத்திராஜ் மகன் ஏழுமலை (62).
இவா்கள் மூவரும் வியாழக்கிழமை புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். ரமேஷ் பைக்கை ஓட்ட ஏழுமலை, குமாா் பின்னால் அமா்ந்திருந்தனா். இவா்கள் வந்த பைக் பள்ளித்தென்னல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அதே திசையில் பின்னால் வந்த வேன் பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் வந்த குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ரமேஷ் மற்றும் ஏழுமலை பலத்த காயங்களுடன் அரியூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.