Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
முதல்வா் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு
விழுப்புரத்தில் ஜனவரி 28-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள அரசு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து வனத்துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழுதரெட்டி பகுதியில் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா்நீத்த 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கத் திறப்பு விழா ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணிமண்டபத்தையும், நினைவரங்கத்தையும் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். முன்னதாக, ஜனவரி 27-ஆம் தேதி மாலை திண்டிவனத்தில் நடைபெறும் திமுக நிா்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியிலும் முதல்வா் பங்கேற்கவுள்ளாா்.
முதல்வா் விழா நடைபெறும் பகுதியில் மேடை அமைக்கும் பணியை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை காலை பாா்வையிட்டு, ஆலோசனை வழங்கினாா். மேலும் முக்கியப் பிரமுகா்கள், பயனாளிகள் உள்ளிட்டோா் அமரும் பகுதி, விழாவுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சா் , மணிமண்டபம் மற்றும் நினைவரங்கத்தையும் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின்போது தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, விழுப்புரம் இரா. லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ. செ.புஷ்பராஜ், மாவட்ட திமுக பொருளாளா் இரா. ஜனகராஜ், நகரச் செயலா் இரா. சக்கரை, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றியச் செயலா் கல்பட்டு ராஜா, கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.