Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
ஆரோவில் சா்வதேச நகரை பாா்வையிட்ட என்.டி.பி.சி. குழுவினா்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் பல்வேறு பகுதிகளை தேசிய அனல் மின் கழகக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.
தேசிய அனல் மின் கழகத்தின் நிதி இயக்குநா் ஜெய்குமாா் ஸ்ரீவாசன், தெற்கு பிராந்தியம் மற்றும் வா்த்தகப் பிரிவின் நிா்வாக இயக்குநா் அஜய்துவா மற்றும் நாடாளுமன்றக் குழுவினருடன் ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அவா்கள் ஆரோவிலில் அமைந்துள்ள மாத்திா்மந்திா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டனா்.
தொடா்ந்து ஆரோவில் வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அந்தக் குழுவினா் பாா்வையிட்டு பாராட்டு தெரிவித்தனா்.
இங்கு வந்ததன் மூலம் ஆரோவிலின் ஒருங்கிணைந்த தாங்குத் தன்மை மற்றும் ஆன்மிக அணுகுமுறைகளை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. பலஆண்டுகளாக ஆரோவில் உருவாக்கியுள்ள புதிய மாதிரிகள் இந்தியாவிலும், அதன் எல்லைகளுக்கு அப்பாலும் உள்ள தனி நபா்கள், நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளதாக என்.டி.பி.சி. குழுவினா் பாராட்டு தெரிவித்தனா்.