செய்திகள் :

Union Budget 2025: 'ரூ.3 லட்சத்திலிருந்து தற்போது ரூ.5 லட்சம்'- கிஷான் கிரெடிட் கார்டு வரம்பு உயர்வு

post image

மத்திய பட்ஜெட் தாக்கல் 11 மணிக்குத் தொடங்கி தற்போது நடந்து வருகிறது.

பட்ஜெட் பேச்சின் தொடக்கத்தில் நிதியமைச்சர் பொருளாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, தனியார் முதலீடு அதிகரிப்பு, மக்கள் மேம்பாடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்வு ஆகிய `5 முக்கிய அம்சங்கள்' இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என்று பேசினார்.

மத்திய நிதியமைச்சர் முதலாவதாக விவசாயத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை அறிவிக்க தொடங்கினார்.

பட்ஜெட் | நிர்மலா சீதாராமன்

அதில், "விவசாயிகள், மீனவர்கள், பால் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 7.7 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இந்த கிரெடிட் கார்டு மூலம் பயனாளர்கள் சிறு கடன்கள் வாங்க முடியும். இதன் கடன் வரம்பு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது" என்று பேசியுள்ளார்.

Union Budget 2025: அடையாள அட்டை, மருத்துவ உதவி... டெலிவரி பாய் போன்ற Gig தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

குறைந்த வேலைவாய்ப்புகள், நிலையற்ற வேலைவாய்ப்புகள் போன்ற காரணங்களால், டெலிவரி பாய் போன்ற கிக் வேலைகளை நோக்கி இளைஞர்கள் அதிகம் நகர்ந்து வருகின்றனர்.நிச்சயமான வேலை, நிரந்தர வருமானம், உரிய அங்கீகாரம், நிர... மேலும் பார்க்க

Union Budget 2025: '1 மணி நேரம் 15 நிமிடங்கள்' - நிர்மலா சீதாராமனின் மிக குறைந்த நேர பட்ஜெட் தாக்கல்

2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வெற்றிகரமாக தாக்கல் ஆகி முடிந்துள்ளது. இந்தப் பட்ஜெட் மூலம் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்... மேலும் பார்க்க

Union Budget 2025: 'ரூ.12 லட்சம்!' - வருமான வரி உச்ச வரம்பு உயர்வு - மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!

வருமான வரியில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.நடுத்தர மக்கள் இந்திய பொருளாதாரத்திற்கு... மேலும் பார்க்க

Union Budget 2025: 'வானோக்கி வாழும் உலகெல்லாம்...' - திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும். அவர் இதுவரை தாக்கல் செய்த பெரும்பாலான பட்ஜெட்டுகளில் திருக்குறள் அல்லது தமிழ் சங்க கால பாடல்களை மேற்கொள் காட்டியுள்ளா... மேலும் பார்க்க

Union Budget 2025: 'அடுத்த வாரம்' - புதிய வருமான வரி சட்டம் அறிமுகம் - நிதியமைச்சர் அறிவிப்பு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். புதிய வருமான வரி சட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுவதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதுவரை 1961-ம் ஆண்டு அறிமு... மேலும் பார்க்க

TVK: தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? - தீயாய் பரவும் தகவலின் பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியான காளியம்மாள், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது. காளியம்மாள் த.வெ.க-வில் இணைவாரா.. நா.த.க-விலேயே த... மேலும் பார்க்க