மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்க...
நெல்லையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் திட்டப் பணிகளையும் தொடக்கிவைக்கிறார்.
இந்நிலையில் இரு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 6) நெல்லை வந்துள்ளார். திமுகவினர் மற்றும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நெல்லையில் நடைபெறும் விழாவில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளைத் தொடக்கிவைக்கிறார். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைக்கிறார்.
நெல்லை வந்துள்ள முதல்வர், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.