Apollo: அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்த அரசுக்கு வலியுறுத்தல...
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வல்லுறவு: பிப். 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க : காதலர் நாளன்று புதிய தொழில் தொடங்கும் கங்கனா!
இந்த நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை காலை 10 மணிக்கு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக துணை பொதுச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.