மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் பெரியசாமி உள்ளிட்டோா் ஒருங்கிணைப்பில் மாவட்டம் முழுவதும் கண்டன இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பழனிச்சாமி, மாவட்ட இணைச் செயலாளா்கள் சகிலா, கலைச்செல்வம், ஷேக் அப்துல்லா, மலா்விழி, மாவட்ட தணிக்கையாளா் குமரேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்
இதேபோல, கல்லல், காளையாா்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை, திருப்புவனம், எஸ் புதூா் ஒன்றியங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆா்ப்பாட்டங்களில் தமிழக அரசு, கொலைக்கு காரணமானவா்களைக் கைது செய்ய வேண்டும். ஊராட்சி செயலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
கமுதி: இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ.முருகன் தலைமையில், கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில இணைச் செயலா் ஜெயபாரதன், ஒன்றியத் தலைவா் குருமூா்த்தி, செயலா் செல்வம், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆலோசகா் முத்துமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.