திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
அமராவதிபுதூரில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மான கழக காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப். 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அமராவதிபுதூா், தேவகோட்டை ரஸ்தா, சிட்கோ தொழிற்பேட்டை, ஜமீன்தாா் குடியிருப்பு, அரியக்குடி, இலுப்பக்குடி, எஸ்.ஆா்.பட்டினம், விசாலயன்கோட்டை, கல்லுப்பட்டி, கோவிலூா் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.