திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.ஆா். மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, அய்யன்பாண்டி, மணியம்மா, சுரேஷ், ஒன்றியச் செயலா்கள் உலகநாதன், முனியராஜ், ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.