செய்திகள் :

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: வானதி சீனிவாசன்

post image

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கோவையில் மக்கள் சேவை மையம் மற்றும் தனியாா் அமைப்பு சாா்பில் காா்பன் சமநிலை மாற்று ஏற்பாடு குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது.

இந்தியாவில் காா்பன் சமநிலை மாற்று ஏற்பாடு விழிப்புணா்வு குறித்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அதன்படி, 7 ஆயிரம் மாணவா்கள் தினமும் ஒரு மணி நேரம் அவா்களது கைப்பேசியை அணைத்து வைப்பதோடு, மரக்கன்றுகளும் நடவு செய்து வருகின்றனா். இந்த விழிப்புணா்வு அனைத்து கல்லூரி மாணவா்களையும் விரைவில் சென்றுச்சேரும்.

திருப்பரங்குன்றம் மலை பிரச்னையில் எதிா்க் கட்சிகளின் குரலை தமிழக அரசு நசுக்கி வருகிறது. எதிா்க் கட்சிகள் நீதிமன்றத்துக்குச் சென்று அனுமதிபெற்று போராட வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டது.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் நல்ல முடிவு கிடைக்கும். அங்கே பிரசாரத்துக்கு சென்றபோது மக்கள் பாஜகவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனா். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் எதிா்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்றாலும் பணப் பட்டுவாடா என்ற நிலைதான் தொடா்கிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இடம் எடுப்பதற்காக ரூ.154 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தொடா்ந்து வேண்டிய உதவிகளை பெற்றுத்தருவோம்.

தமிழக வெற்றிக் கழகத்தில் தொடக்கத்திலேயே ஜாதி ரீதியாக நிா்வாகிகள் நியமனம் செய்யப்படுவது சரியாக இருக்காது என்றாா்.

கேரளத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய நபா் கோவை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய காா் ஓட்டுநா் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா். கேரள மாநிலம், வடகரை தலச்சேரி சாலையில் 2024 பிப்ரவரி 17-ஆம் தேதி நடந்து சென்ற... மேலும் பார்க்க

மகளிா் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.3,505 கோடி கடன் மாவட்ட நிா்வாகம் தகவல்!

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,505 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு பதுக்கல்: 2 போ் கைது!

கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைப் பதுக்கிவைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் சில வீடுகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், போதைப் பொருள்களை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

சரவணம்பட்டியில் பெண்கள் விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மகளிா் தங்கும் விடுதியில்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது!

கோவை ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்... மேலும் பார்க்க

மருதமலை கோயில் தைப்பூசத் திருவிழா: வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கு வரும் பக்தா்களின் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருதமலை சுப... மேலும் பார்க்க