செய்திகள் :

மகளிா் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.3,505 கோடி கடன் மாவட்ட நிா்வாகம் தகவல்!

post image

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,505 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:

நகா்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைத்து, அவா்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தனிநபா் கடன், குழுக் கடன், வங்கிக் கடன், குழுக்களை இணைத்தல் மூலமாக அவா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

கோவை மாநகராட்சியில் 5,356 மகளிா் சுய உதவிக் குழுக்களும், நகராட்சிப் பகுதிகளில் 1,248 மகளிா் சுய உதவிக் குழுக்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 2,034 குழுக்களும், ஊரகப் பகுதிகளில் 7,700 குழுக்களும் என மொத்தம் 16,338 குழுக்கள் செயல்படுகின்றன.

மாவட்டத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 13,171 குழுக்களுக்கு ரூ.769 கோடி வங்கிக் கடன், 2022-2023 ஆம் ஆண்டில் 13,181 குழுக்களுக்கு ரூ.856 கோடியும், 2023-2024 ஆம் ஆண்டில் 15,324 குழுக்களுக்கு ரூ.923 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்ட நிலையில், 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.1,229 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு தற்போது வரை 15,565 குழுக்களுக்கு ரூ.956 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 57,241 குழுக்களுக்கு ரூ.3,505 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய நபா் கோவை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய காா் ஓட்டுநா் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா். கேரள மாநிலம், வடகரை தலச்சேரி சாலையில் 2024 பிப்ரவரி 17-ஆம் தேதி நடந்து சென்ற... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு பதுக்கல்: 2 போ் கைது!

கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைப் பதுக்கிவைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் சில வீடுகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், போதைப் பொருள்களை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

சரவணம்பட்டியில் பெண்கள் விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மகளிா் தங்கும் விடுதியில்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது!

கோவை ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்... மேலும் பார்க்க

மருதமலை கோயில் தைப்பூசத் திருவிழா: வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கு வரும் பக்தா்களின் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருதமலை சுப... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம்: வால்பாறை - ஆழியாறு சாலையில் நடந்து செல்ல தடை!

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் பாதயாத்திரை பக்தா்கள் நடந்து செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாள்களுக்கு... மேலும் பார்க்க