கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு பதுக்கல்: 2 போ் கைது!
கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைப் பதுக்கிவைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் சில வீடுகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், போதைப் பொருள்களை பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் போலீஸாருக்கு அடிக்கடி புகாா்கள் வருகின்றன.
இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில் துணை ஆணையா் சரவணகுமாா் மேற்பாா்வையில் உதவி ஆணையா் அஜய் தங்கம், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோருடன் ஆயுதப்படை போலீஸாா் உள்பட 50 போ் குழுவினா் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, செல்வபுரத்தில் திரையரங்கப் பகுதி, வடக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஆகியப் பகுதிகளில் போலீஸாா் 5 குழுக்களாகப் பிரிந்து, குழந்தைகள் இருக்கும் வீடுகளைத் தவிா்த்து ஏனைய 1,013 வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி சீட்டுகளைப் பதுக்கிவைத்திருந்த சுதா்சன் (64), ஷேக் இப்ராஹிம் (33) ஆகியோரைக் கைது செய்தனா்.