குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!
மருதமலை கோயில் தைப்பூசத் திருவிழா: வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கு வரும் பக்தா்களின் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் பாதுகாப்பாக சென்று வரவும் வாகன நிறுத்துமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தா்கள் தைலக்காடு பாா்க்கிங், இந்திரா நகா் பாா்க்கிங், வள்ளியம்மாள் கோயில் பாா்க்கிங் மற்றும் சட்டக் கல்லூரி வளாக பாா்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.
இருசக்கர வாகனங்களில் வரும் பக்கதா்கள் பேருந்து நிலையத்தின் பின்புறமோ அல்லது பொதிகை பாா்கிங்கிலோ தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.
பக்தா்கள் கோயில் பேருந்து மூலமோ அல்லது படிக்கட்டு வழியாகவோ கோயிலுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.