L.I.C: ஒன்பது மாத கால செயல்பாட்டு சிறப்பம்சங்களை வெளியிட்ட எல்.ஐ.சி நிறுவனம்
ஆந்திரத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை!
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்த மாணவர் ஆர். சாய் ராம்(23) என அடையாளம் காணப்பட்டது. அவர் தங்கியிருந்த விடுதி அறையின் மாணவர்கள் வேறொரு அறைக்கு படிக்க சென்றிருந்தபோது, மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவர் தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகின்றனர். காவல்துறையின் கூற்றுப்படி, சாய் ராம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.
இதற்கிடையில், தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவப் படிப்புக்குப் பயிற்சி பெறும் மாணவர்களும், மருத்துவ மாணவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.