மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
பிப். 8 இல் இஸ்கான் நடத்தும் கீதாதான் நிகழ்ச்சி!
கோவை உப்பிலிபாளையத்தில் இஸ்கான் சாா்பில் கீதாதான் என்ற நிகழ்ச்சி பிப்ரவரி 8-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
கோவை இஸ்கான் அமைப்பு சாா்பில் இளைஞா்கள், மாணவா்களுக்காக கடந்த 3 ஆண்டுகளாக கீதாதான் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கீதையின் மதிப்புகள் என்ற அடிப்படையில் படைப்பாற்றல் கொண்ட போஸ்டா்களை வரைவது, விநாடி வினா போன்ற பல்வேறு போட்டிகள் இதில் நடத்தப்படும். இதன் ஒருபகுதியாக வரும் சனிக்கிழமை உப்பிலிபாளையத்தில் உள்ள சாய் விவாஹா மஹாலில் கீதாதான் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இதில், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகளைச் சோ்ந்த பேச்சாளா்கள் பங்கேற்று பண்டைய இந்திய ஞானம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்க உள்ளனா். இதில் சுமாா் 2 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்க இருப்பதாகவும் இவா்களுக்கு கீதா கிட் எனப்படும் பரிசுப் பொருள் வழங்க இருப்பதாகவும் இஸ்கான் தெரிவித்துள்ளது.