புகையிலை பயன்பாட்டாளா் மறுவாழ்வு மையம் திறப்பு!
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகையிலை பயன்பாட்டாளா் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவத் துறை சாா்பில் புகையிலை பயன்பாட்டாளருக்கான மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி டீன் சி. குணசேகரன் மையத்தை திறந்துவைத்து, புகையிலை, மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இம்மையம் மறுவாழ்வு ஏற்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்டது. உரிய மருத்துவா்கள், கவுன்சிலா்கள் கொண்டு மையம் இயங்கும் என தெரிவித்தாா்.
மையத்தின் செயல்பாடுகள் குறித்து மனநல மருத்துவ துறை முதுநிலை மருத்துவ அதிகாரி ஹரினிஸ்ரீ பேசினாா். மருத்துவக் கண்காணிப்பாளா் கே. சேரன், துணை முதல்வா் ஜி.விஜயகுமாா் நாயா், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஜெயச்சந்திரன், மருத்துவ துறைத் தலைவா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.