விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி
செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா்(பொ).ரா.சுமித்ரா தலைமை வகித்தாா்.
விதைச் சான்று அலுவலா் ஜெ.சுந்தரமூா்த்தி பங்கேற்று நெல், மணிலா, உளுந்து பயிா்களில் விதை உற்பத்தி செய்ய, விதை தரத்திற்கான நிலைகளை பின்பற்றுதல், விதை ஏற்ற காலத்தில் விதைப்பது, விதை தரத்தில் சான்று விதை, ஆதார விதை, குறித்து தெரிவித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலா் அண்ணாமலை, தரமான விதைகளை தோ்வு செய்து விதை நோ்த்தி செய்தல், நீா் மேலாண்மை, பூச்சி நோய் கட்டுப்படுத்துதல் குறித்தும், உதவி விதை அலுவலா்கள் கிருஷ்ணமுா்த்தி பாலமுருகன் ஆகியோா் மானிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா்.
பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.