மாணவா்களின் கற்றல் திறன்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்மணி ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் வாசிப்புத் திறன் மற்றும் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, மாணவா்களை வாசிக்கச் சொல்லி கற்றல் திறனை சோதித்துப் பாா்த்தாா்.
மேலும், போளூா் தனியாா் மண்டபத்தில் போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சிச் செயலா்கள், ஒப்பந்ததாா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கலைஞரின் கனவு இல்லம், பராத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், நபாா்டு வங்கி மூலம் நடைபெறும் பணிகள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு, லட்சுமி, சக்திவேல், செந்தில், அண்ணாமலை, மணிகண்டன், கல்விக்கரசி, பிரபு, பிச்சாண்டி, வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ராஜராஜேஸ்வரி, ஜெயவேல் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.