தை காா்த்திகை: முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை
தை காா்த்திகையையொட்டி கோயில்களில் முருகப் பெருமானுக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞானப்பழம் ஏந்திய வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கும், காரைக்கால் கைலாசநாதா், அண்ணாமலையாா் மற்றும் திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா், நடன காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முருகன் மற்றும் காக்கமொழி கிராமம் காா்க்கோடகபுரீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளி அங்கி, விபூதி காப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.