செய்திகள் :

Doctor Vikatan: கால் வலி... வெந்நீரில் பாதங்களை வைத்திருப்பது தீர்வு தருமா?

post image

Doctor Vikatan: எனக்கு 45 வயதாகிறது. அடிக்கடி கால்களில், குறிப்பாக பாதங்களில் வலி வருகிறது.  இதை பற்றி சொல்லும்போது பலரும் 'வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சரியாகிவிடும்' என்பதையே தீர்வாகச் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை.... எல்லோரும் இதைப் பின்பற்றலாமா?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

பாத வலிக்கு கால்களை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருக்கும் வழக்கம் பல வருடங்களாக நாம் பின்பற்றும் சிகிச்சை தான். அதில் நிறைய பலன்கள் உண்டு. அதே சமயம் அப்படிச் செய்யும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் நீரிழிவு பாதிப்பு உள்ளவர் எனில், வெந்நீரில் கால்களை வைப்பதற்கு முன்பு உங்கள் உணர்ச்சி நரம்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று கவனியுங்கள். அடுத்து, கால்களில் ஏதேனும் புண்களோ, தொற்றோ இருந்தாலும் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. ஒருவேளை ஏதேனும் தொற்று ஆரம்ப நிலையில் இருந்தால், வெந்நீரில் கால்களை வைக்கும்போது, சருமத்தின் வழியே அது பரவ வாய்ப்பு உண்டு. அடுத்தது, வெந்நீரானது, உங்கள் கை பொறுக்கும் அளவு சூட்டில் இருக்க வேண்டும். அதாவது, 36 முதல் 38 டிகிரி வெப்பம் சரியானது. ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. அதற்கு மேல் வைத்தால் கால்கள் வீங்கலாம்.

வெந்நீரில் கால்களை வைப்பதால் உண்மையிலேயே பலன் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கும். பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வலி குறையும். கால்களின் சருமத்தில் உள்ள அழுக்குகளும் கிருமிகளும் நீங்குவதால் தொற்று வருவது தவிர்க்கப்படும்.

வெந்நீரில் கால்களை வைப்பதால் உண்மையிலேயே பலன் கிடைக்குமா என்றால். நிச்சயம் கிடைக்கும். பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வலி குறையும்.

வெந்நீரில் கூடுதலாக சில விஷயங்களைச் சேர்க்கும்போது பலன்கள் இன்னும் அதிகரிக்கும். சாதாரணமாக, நாம் உப்பு சேர்த்த வெந்நீரில் கால்களை வைத்திருப்போம். உப்பு, கிருமி நாசினியாகச் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மருந்துக் கடைகளில் எப்சம் சால்ட் என ஒன்று கிடைக்கும்.  அது தசைகளைத் தளர்த்தி, நல்ல தூக்கத்தையும் வரவழைக்கும். அதே வெந்நீரில் கிருமி நாசினி சேர்த்து, கால்களை ஊற வைத்தால், மழைக்காலத் தொற்றுகளில் இருந்து காக்கும்.  எனவே, அளவோடு செய்வதன் மூலம் வெந்நீர் சிகிச்சை அற்புதமான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இதையெல்லாம் தாண்டி, உங்களுக்கு கால் வலி பல நாள்களாகத் தொடர்கிறது என்றால், வெந்நீர் சிகிச்சையை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி, வலிக்கான காரணம் அறிந்து சரியான சிகிச்சையை மேற்கொள்வதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

இந்தியாவில் பஞ்சத்தை போக்க அரும்பாடுபட்டவர்... பசுமைப் புரட்சி பகலவன் சி.சுப்பிரமணியம்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர், உணவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அன்றைய காலகட்டத்தில் நிலவிய பஞ்சத்தையும் பசியையும் நீக்க, பசுமைப் புரட்சியை முனைப்புடன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan:சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் ... மேலும் பார்க்க

Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

''உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக்கூடிய பழம். வைட்டமின், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும்... மேலும் பார்க்க

கொடி கம்பம் வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பா? அதிர்ந்துபோன அரசியல் கட்சிகள் | Decode

அரசியல் கட்சிகள் பொது இடங்களில் வைத்திருக்கும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவில் அலசப்பட்டிருக்கிறது மேலும் பார்க்க

`ஆளுநருக்கு நடத்தை விதிகள் முதல் வக்ப் மசோதா வரை' - திமுக நிறைவேற்றிய 6 தீர்மானங்கள்!

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 2025 வரும் பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்... மேலும் பார்க்க