திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்: 5 பேர் பலி!
Credit Card: கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் `இதை' கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!
இன்று பலரின் ஷாப்பிங் பில்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது 'கிரெடிட் கார்டு' தான். பலர் கிரெடிட் கார்டு தான் இருக்கிறதே என்று அளவுக்கு மீறி பயன்படுத்தி, கடைசி நேரத்தில் பணச்சிக்கலில் மாட்டிகொள்கிறார்கள். ஆகையால், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை...செய்ய கூடாதவை எவை என தெரிந்துகொள்வோம்...வாங்க...
50 சதவிகிதத்திற்கு மேல்...
உங்கள் மாத வருமானத்தில் 50 சதவிகிதத்தை தாண்டி கிரெடிட் கார்டு பயன்படுத்தாதீர்கள். இதற்கு மீறி சென்றால் அத்தியாவசிய செலவு, கிரெடிட் கார்டு பில், பிற கமிட்மென்ட் என சிக்கலில் மாட்டி கொள்வீர்கள்.
கிரெடிட் லிமிட் இருக்கிறதே என்று 100 சதவிகிதத்தையும் பயன்படுத்தாமல், 30 - 45 சதவிகிதத்திற்கு மேல் கிரெடிட் லிமிட்டை பயன்படுத்தாதீர்கள். மீறி போனால், 50 சதவிகிதத்தை தாண்டவே தாண்டாதீர்கள்.
`செக்மேட்' வேண்டும்!
பில் கட்ட வேண்டிய தேதியை சரியாக தெரிந்துகொண்டு அந்தத் தேதியில் கட்டிவிடுங்கள். தவறினால், அபராதம் என தேவையில்லாத பல மடங்கு செலவை இழுத்து வந்துவிடும்.
பட்ஜெட் இல்லாமல் செலவு செய்யுங்கள். பட்ஜெட் என்ற செக்மேட்டை ஏற்கெனவே உருவாக்கி விட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தச் செக்கை தாண்டி அதிக செலவை செய்யமாட்டீர்கள். அப்போது உங்களுடைய கிரெடிட் கார்டை தேவையில்லாமல் பயன்படுத்தும் அவசியம் ஏற்படாது.
கிரெடிட் கார்டு இருக்கிறதே என்று ஆசைக்கு வாங்காமல், எது அத்தியாவசியமோ அதை மட்டும் வாங்குங்கள். ஆடம்பரமாக எதாவது வாங்க ஆசைப்பட்டால், கிரெடிட் கார்டு இல்லாமல் உங்கள் கையிலேயே அதிக பணம் இருந்தால் மட்டும் வாங்குங்கள்.
வேண்டுமா... வேண்டாமா?
கிரெடிட் கார்டில் ஒரு பொருள் வாங்கப்போகிறீர்கள் என்றால் அந்தக் காசை எப்படி கட்டப்போகிறீர்கள். அந்தப் பணம் கட்டுமளவுக்கு நம்மிடம் பணம் இருக்குமா அல்லது எதாவது வருமானம் வருமா என்று தெரிந்தப்பின் வாங்குங்கள். இப்போது வாங்கிவிட்டு, பின், காசு கட்டமுடியாமல் தவிக்காதீர்கள்.
ஒரு செலவை செய்வதற்கு முன், இது நிச்சயம் தேவையா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இது கிரெடிட் செலவிற்கான ரூல் மட்டுமல்ல...இந்த ரூலை நீங்கள் பணம், டெபிட் கார்டு என எதை கொண்டு செலவு செய்தாலும் பின்பற்றுங்கள்.
கடனா...?
சிலர் ஒரு கிரெடிட் கார்டை பில் கட்ட முடியாமல், இன்னொரு கிரெடிட் கார்டு வாங்கி முந்தைய கிரெடிட் கார்டின் பில்லை கட்டுவார்கள். இது சுற்றி வளைச்சு மூக்கை தொடுவதுப்போல ஆகும். ஏற்கெனவே செலவை கட்டுப்படுத்த முடியாமல் கடனில் சிக்கி கொண்டிருப்பவருக்கு, இரண்டாவது கிரெடிட் கார்டு எக்ஸ்ட்ரா சுமை. அதனால், எக்காரணத்தை கொண்டும் இந்தத் தவறை செய்யாதீர்கள்.
சில பேர் கிரெடிட் கார்டை வைத்து கடன் தொகை அடைக்கிறீர்கள். இதில் பிராசஸிங் ஃபீஸ் அதிகம். அதனால் இது வேண்டவே வேண்டாம்.
கில்லி ஆகலாம்!
'இப்போது கையில் காசு இல்லை' என்று சிலர் டெபிட் கார்டு பயன்படுத்தி காசு எடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இப்படி பணம் எடுக்கும்போது, அதற்காக வங்கிகள் வசூலிக்கும் கடனின் வட்டியானது வாகன கடன், தனிநபர் கடன், வீட்டு கடன் ஆகிய கடனின் வட்டியை விட அதிகம் ஆகும். அதனால், கட்டாயமாக, இப்படி பணம் எடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.
இந்த ரூல்ஸை எல்லாம் ஃபாலோ செய்துவிட்டாலே, கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் நீங்கள் கில்லி தான்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...