செய்திகள் :

உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!

post image

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா்.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை எனவும், சம்பவம் தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், சம்பல் மாவட்டம் முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவுவதால், சமூக செயல்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட மாவட்டத்துக்குள் முன் அனுமதியினறி வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து ஆட்சியர் ராஜேந்திர பைஸியா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : பேச்சுக்கு நேரமில்லை.. மகாராஷ்டிர புதிய முதல்வர் நாளை பதவியேற்பது கட்டாயம்!! ஏன்?

கலவரம் ஏன்?

சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஆய்வு நடத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக, மசூதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நீதிமன்ற ஆணையா் 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடங்கினாா். இதையடுத்து, உள்ளூா் மக்கள் அப்பகுதியில் கூடினா். அப்போது கூட்டத்தில் இருந்து சிலா், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களை நோக்கி கற்களை வீசினா். அங்கு நின்றிருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனா்.

இதைத் தொடா்ந்து, காவலா்கள் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், சிறிய அளவில் தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனா். அப்போது வெடித்த வன்முறையில் அடையாளா் தெரியாத நபா்கள் சிலா் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் நயீம், பிலால், நௌமான் ஆகிய 3 போ் உயிரிழந்தனா். சுமாா் 20 காவலா்கள் காயமடைந்தனா்.

திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்: 5 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.இந்த விபத்து மல்லவான் காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் அதிகாலை 3 மணியளவ... மேலும் பார்க்க

அதிகாரப் பசி கொண்டவர்கள் மக்களால் நிராகரிப்பு: மோடி

அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிர... மேலும் பார்க்க

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியுள்ளது.இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக வக்ஃப் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்கள் மத்திய அரசா... மேலும் பார்க்க

கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார், இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.குருகிராம் மாவட்டத்தில் இருந்து பரேலி நோக்கி சனிக்கிழமை இரவு திருமண... மேலும் பார்க்க

அதானி விவகாரம்: முதல் நாளே ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்த காங்கிரஸ் எம்பிக்கள்!

நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விசாரிக்கக் கோரி அவைத் தலைவருக்கு காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள... மேலும் பார்க்க

மக்களவையில் டிஜிட்டல் வருகைப் பதிவேடு!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்று (நவ.25) தொடங்குகிறது. இதில், மக்களவை உறுப்பினர்கள் மின்னணு டேப் மூலம் வருகையைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் நாட... மேலும் பார்க்க