செய்திகள் :

``நிறைய பேர் அப்பா வாய்ஸை AI பண்ணலாமான்னு கேட்குறாங்க... ஆனா!'' - எஸ்பிபி சரண்

post image

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ `சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4'. இந்த சீசனின் நடுவர்களுள் ஒருவர் எஸ்பிபி சரண். சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை சந்தித்துப் பேசினோம்.

"நான் ரொம்ப லக்கின்னு நினைக்கிறேன் எனக்கு ஏனோ சின்னப் பசங்களுக்கான நடுவராகத்தான் போறேன். நாம கஷ்டம்னு நினைக்கிற நிறையப் பாடல்களை குழந்தைங்க எடுத்து சூப்பரா பாடுறாங்க. அது நமக்கு இன்ஸ்பயர் ஆக இருக்கு. தொடர்ந்து நாமளும் அப்படியான பாடல்கள் பாடணுங்கிற உணர்வு ஏற்படுது. குழந்தைங்ககிட்ட நிறைய கதைகள் இருக்கு. அவங்க வயசு, சைசுலாம் மீறி பெர்ஃபார்ம் பண்றாங்க. அவங்க பாடுறதைக் கேட்டுட்டு என்ஜாய் பண்ணாம இருக்க முடியாது.

எஸ்பிபி சரண்

இங்க ஒரு பையனுக்கு பேசுறப்ப திக்குது அவனால தொடர்ந்து பேசவே முடியல ஆனா பாடுறப்ப அந்தப் பிரச்னையே இல்ல. நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நீ அதுக்கு பாட்டாவே பதில் சொல்லுன்னு சொல்லி அவனை ட்ரை பண்ண சொன்னப்ப அவன் பாட்டு மூலமா அழகா பதில் சொல்றான்.

நான் முறையா சங்கீதம் கத்துக்கல. எனக்கு கேள்வி ஞானம் தான். அதனால குழந்தைங்க பாடும் போது அவங்களுக்குப் புரியுற மாதிரி பிழைகளை சுட்டிக்காட்டி அவங்களை வழிநடத்திட்டு அந்த நிகழ்ச்சியை செமயா என்ஜாய் பண்ணிட்டிருக்கேன்!" என்றவரிடம் எஸ்பிபி குரலில் மனசிலாயோ பாட்டு வந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்னு பலர் சொன்னாங்க. AI குரலில் அவரது குரலை கேட்க வாய்ப்பிருக்கிறதா? எனக் கேட்டோம்.

"ஒவ்வொரு பாடகர்களும் பல ஆயிரம் பாடல்களைப் பாடிட்டாங்க. அவங்களை அப்படியே விட்றணும். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வகையில் இப்பவும் மக்கள் மனசுல இருக்கு. அப்படி ஒரு சிங்கர் இருந்தாங்க, என்ன மாதிரியான பாடல்கள் எல்லாம் பாடியிருக்காங்க அப்படின்னு இருக்கணும். மனசிலாயோ நல்ல பாட்டு தான். ஆனா, AIல எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு டெக்னாலஜி கையில் இருக்கிறதனால எதுனாலும் பண்ணலாமா? தப்பா எடுத்துக்க வேண்டாம் இப்ப எஸ்பிபி இருந்திருந்தால் ஒருவேளை இந்தப் பாட்டு கேட்டுட்டு இந்தப் பாட்டு வேண்டாமே நான் பாட மாட்டேன்னு சொல்லியிருக்கலாம். இந்தப் பாட்டு நான் பாடுறேன், பாடலைங்கிற முடிவை பாடகர்கள் எடுப்பாங்க.

எஸ்பிபி சரண்

AI அந்த வாய்ப்பை கொடுக்காது. நம்ம அவங்க மேல உள்ள அன்பால எல்லா பாட்டும் அவங்க பாடினா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். அந்தக் குரலை கொண்டு வந்திடலாம். ஆனா, எமோஷனஸை கொண்டு வர முடியாது. நிறைய பேர் அப்பா வாய்ஸை AI பண்ணலாமான்னு கேட்கிறாங்க. நான் நோ சொல்லிடுறேன். ரெஸ்பான்சிபிள் ஆன மியூசிக் டைரக்டர் ஆக இருந்தா கூட நான் நோ சொல்லிடுறேன். அவருடைய குரல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துட்டே இருக்கணும். அந்த உணர்வு இருக்கணும்னு நாங்க விரும்புறோம்!" என்றார்.

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் குறித்தும் எஸ்பிபி சரண் அவர்களின் பேட்டியைக் காணவும் லிங்கை கிளிக் செய்யவும்!

BB Tamil 8 Day 49: யாருடைய ஆட்டம் முடிந்து விட்டது?; சாச்சனாவின் சிரிப்பு - விசேவின் கடுப்பு

இன்றைய எபிசோடின் இறுதியில் வெளிப்பட்ட டிவிஸ்ட் எதிர்பார்த்ததுதான் என்றாலும் சரியான சமயத்தில் செய்யப்பட்ட மாஸ்டர் மூவ். ‘கோதாவரி .. வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி’ என்று பிக் பாஸ் போட்ட கோடு இன்று... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 48: `காதல்... காதல்...' ராணவ் செய்யும் அலப்பறை; சட்டென்று பொறுமையை இழக்கிறாரா விசே?

இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி ஹோஸ்ட் செய்த விதம் அத்தனை ஜாலியாக இருந்தது. போட்டியாளர்களை சுவாரசியமாக போட்டு வாங்கினார். ஆனால் இது முதல் பகுதியில் மட்டுமே. பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ரீ என்ட்ரி ஆன முன்னாள் போட்டியாளர்.. வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!

விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 கிட்டத்தட்ட பாதி நாட்களைத் தொட்டு விட்டது.ரவீந்தர், ரஞ்சித், அர்னவ், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி, சாச்சனா, சுனிதா என சினிமா, சின்னத்திர... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 47: `ரோஷம்னு ஒன்னு இருக்கா; நடிக்கிறா...' - வன்மம் கொட்டிய ஹவுஸ்மேட்ஸ்?!

ரோஸ்ட்டிங் டாஸ்க், கேப்டனுக்கான போட்டி, பெண்களுக்கு ஆண்கள் சமைத்துத் தந்தது போன்ற விஷயங்களால் இன்றைய எபிசோடு சற்று சலிப்பு இல்லாமல் நகர்ந்தது. ஆனால் சுவாரசியமாக மாறவில்லை.BB Tamil 8 Day 47பிக் பாஸ் வீ... மேலும் பார்க்க