செய்திகள் :

டிச. 9 முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அப்பாவு

post image

வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் குறித்து தலைவர் அப்பாவு செய்தியாளர்களை இன்று சந்தித்து அறிவிப்பினை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, சட்டப்பேரவை விதி 26.1ன் கீழ், சட்டப்பேரவைக் கூட்டமானது வருகிற டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடவிருக்கிறது என்று அறிவித்தார்.

எத்தனை நாள்கள் நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அலுவல் ஆய்வுக் குழு கூடித்தான், பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என முடிவெடுக்கும் என்றும். இனி காலை 9.30 மணிக்கு அவை கூடும் என்று கடந்த தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.

பொதுவாக, அலுவல் ஆய்வுக் குழு கூடித்தான், கூட்டத் தொடர் குறித்து முடிவெடுக்குமே தவிர, கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்று நான் தன்னிச்சையாக அறிவித்துவிட முடியாது, அலுவல் ஆய்வுக்குழுவில் அனைத்துக் கட்சியினரும் இடம்பெற்றுள்ளனர் என்றும் அப்பாவு கூறினார்.

பேரவைக் கூட்டத் தொடர் நேரலை குறித்து கேட்டதற்கு, சட்டப்பேரவை நடவடிக்கைகள் படிப்படியாக நேரலை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த கேள்விக்கு, செயற்கை நுண்ணறிவு துறையில், இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சட்டப்பேரவையும் காகிதமில்லாத சட்டப்பேரவையாக நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்து மாணவர்கள் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதல்வர் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,நேற்று (24.11.24) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும... மேலும் பார்க்க

விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையத்தைத் திறந்துவைத்தார் ஸ்டாலின்!

சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் 2 நாள்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தா... மேலும் பார்க்க

அதிக எச்சரிக்கையில் டெல்டா மாவட்டங்கள்: சென்னைக்கு?தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: திங்கள்கிழமை இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று... மேலும் பார்க்க

9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை!

சென்னை கடலுர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கிவரும் நிலையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திங்கள்கிழமை வலுப்பெற்றது.கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழ... மேலும் பார்க்க