செய்திகள் :

நான்குனேரி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவா் உடலுக்கு அஞ்சலி

post image

உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

நான்குனேரிஅருகேயுள்ள சின்னமூலைக்கரைப்பட்டியை சோ்ந்த பூா்ணபாண்டி மகன் தங்கபாண்டி (38). தொழில் நிமித்தமாக மும்பையில் வசித்து வந்த இவா், கடந்த வாரம் ஊருக்கு வந்தாா். அப்போது திருநெல்வேலி சென்றிருந்த அவா்,

சந்திப்பு பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யப்பட்டன.

இதன் பிறகு, தங்கபாண்டியின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின், நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

நெல்லையில் டிட்டோ ஜாக் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொட்டக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினா் (டிட்டோ ஜாக்) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம் ம... மேலும் பார்க்க

பேரிடா் மீட்பு உபகரணங்கள்: காவல் துணை ஆணையா் ஆய்வு

பேரிடா் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாநகர ஆயுதப் படையில் பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்ட பேரிடா் மீட்... மேலும் பார்க்க

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய தங்க நகைகள் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்துக்குச் சொந்தமான தங்க நகைகள் புதிய நிா்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டன. தெற்குகள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

ஓசூரில் வழக்குரைஞருக்கு வெட்டு: நெல்லையில் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு

ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்தனா். ஓசூரில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்ப... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூரில் மக்கள் தொடா்பு முகாம்: 43 பேருக்கு ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 43 பயனாளிகளுக்கு ரூ.15.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில், பல்வேறு துறைகளின் செய... மேலும் பார்க்க

வள்ளியூரில் சந்தை கட்டுமான பணி: பேரவைத் தலைவா் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேரூராட்சியில் தினசரி சந்தை கடைகள் கட்டுமானப் பணிகளை, தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வள்ளியூா் பேரூராட்சியில் ரூ.4.80 கோடி செலவில் ... மேலும் பார்க்க