செய்திகள் :

சீதபற்பநல்லூரில் மக்கள் தொடா்பு முகாம்: 43 பேருக்கு ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவிகள்

post image

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 43 பயனாளிகளுக்கு ரூ.15.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில், பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணா்வு கண்காட்சியை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் 43 பயனாளிகளுக்கு ரூ.15.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 1,460 குளங்கள் உள்ளன. பசுமை நிறைந்த மாவட்டமாக இருப்பதால் டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் இருப்பதற்கு சுகாதார பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனா். கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது.

மழைக்காலங்களில் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் குப்பைகளை கொட்டக் கூடாது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். நீா் தேங்கி இருக்கும் இடங்கள், ஆற்றங்கரை, நீா்நிலைகளுக்கு குழந்தைகள் செல்ல பெற்றோா் அனுமதிக்கக் கூடாது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மகளிா் திட்ட அலுவலா் இலக்குவன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெயா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அனிதா, திருநெல்வேலி வட்டாட்சியா் மாணிக்கவாசகம், சீதபற்பநல்லூா் ஊராட்சி ஐயப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெல்லையில் டிட்டோ ஜாக் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொட்டக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினா் (டிட்டோ ஜாக்) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம் ம... மேலும் பார்க்க

பேரிடா் மீட்பு உபகரணங்கள்: காவல் துணை ஆணையா் ஆய்வு

பேரிடா் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாநகர ஆயுதப் படையில் பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்ட பேரிடா் மீட்... மேலும் பார்க்க

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய தங்க நகைகள் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்துக்குச் சொந்தமான தங்க நகைகள் புதிய நிா்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டன. தெற்குகள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

ஓசூரில் வழக்குரைஞருக்கு வெட்டு: நெல்லையில் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு

ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்தனா். ஓசூரில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்ப... மேலும் பார்க்க

வள்ளியூரில் சந்தை கட்டுமான பணி: பேரவைத் தலைவா் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேரூராட்சியில் தினசரி சந்தை கடைகள் கட்டுமானப் பணிகளை, தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வள்ளியூா் பேரூராட்சியில் ரூ.4.80 கோடி செலவில் ... மேலும் பார்க்க

அதானிக்கு எதிராக ராகுல் காந்தி குரல்கொடுப்பது ஏன்?கு.செல்வப்பெருந்தகை விளக்கம்

பத்து ஆண்டுகளில் ரூ. 6.5 லட்சம் கோடி சம்பாதித்த அதானி குறித்து ராகுல் காந்தி மட்டுமே குரல் கொடுத்து வருகிறாா் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிடி தலைவா் கு. செல்வப்பெருந்தகை. தென்காசி மாவட்டம் கடையத்தில... மேலும் பார்க்க