செய்திகள் :

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

post image

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

விஷ்ணுபூரின் இம்பாலில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4:42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.64 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.83 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையுடன் 10 கிமீ ஆழத்தில் விஷ்ணுபூர் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இதன் நீளம்: 93.83 ஆகவும், ஆழம் 10 கி.மீட்டராகவும் பதிவாகியுள்ளதாகதெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?

தற்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக போலி வேலைவாய்ப்புகளை அறிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடப்பது என்பது குதிரைக்கொம்புபோல் ஆகிவிட்டது என்று வேலை ... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச மின்சாரம்! கேஜரிவால் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், அடுத்தாண்டு நடைபெறும் தில்லி பேரவைத் தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.தில்ல... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும்: அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெய்ப்பூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேர்தலுக்கு பி... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்நாடு முழுவதும் டிஜிட்டல் கைது எனும் பெயரில் நடந்த மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை மத்திய உள்விவகாரத் துறை அமைச்சக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்கண்டில் ஆட்சி அமைப்போம்: கார்கே நம்பிக்கை

மகாராஷ்டிரம், ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று பெங்களூருவில் செய்தியாகளுக்கு ... மேலும் பார்க்க

பஸ்தரில் மீண்டும் அமைதி திரும்பியுள்ளது: சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர். கொரஜ்குடா, தாண்டேஸ்புரம், நகரம் மற்றும... மேலும் பார்க்க