அரசின் ஆதரவு இல்லாததால் பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற நடிகை!
வள்ளியூரில் சந்தை கட்டுமான பணி: பேரவைத் தலைவா் ஆய்வு.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேரூராட்சியில் தினசரி சந்தை கடைகள் கட்டுமானப் பணிகளை, தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வள்ளியூா் பேரூராட்சியில் ரூ.4.80 கோடி செலவில் 222 புதிய கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கான கட்டுமானப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், தினசரி சந்தை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பொறியாளா் சேதுராமலிங்கத்திடம் சந்தை நுழைவு வாயில் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, தி.மு.க. மாவட்ட இணைச் செயலா் நம்பி, பேரூராட்சி துணைத் தலைவா் கண்ணன், இளைஞரணி தில்லை, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.