ஊட்டி: கிலோ 20 ரூபாய் வரை போகும் முட்டைகோஸ்... அறுவடையில் விவசாயிகள் மும்முரம்!
அதானிக்கு எதிராக ராகுல் காந்தி குரல்கொடுப்பது ஏன்?கு.செல்வப்பெருந்தகை விளக்கம்
பத்து ஆண்டுகளில் ரூ. 6.5 லட்சம் கோடி சம்பாதித்த அதானி குறித்து ராகுல் காந்தி மட்டுமே குரல் கொடுத்து வருகிறாா் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிடி தலைவா் கு. செல்வப்பெருந்தகை.
தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள செல்லம்மாள் பாரதியாா் கற்றல் மையத்திற்கு வியாழக்கிழமை வந்த செல்வப் பெருந்தகை, அங்குள்ள செல்லம்மாள்- பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கடையம் கிளை நூலகத்தின் புரவலராக தன்னை இணைத்துக்கொண்டாா்.
பின்னா், செய்தியாளரிடம் அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது கணக்குக் குழுவினா் ஆய்வுசெய்த பிறகு தற்போது அந்தப் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
அதானி சூரிய ஆற்றல் மின்சக்தி தொடங்குவதற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவில் ராகுல் காந்தி மட்டுமே குரல் கொடுத்து வருகிறாா். பிரதமா் நரேந்திர மோடி அதானிக்கு பல்வேறு சலுகைகள் வங்கி மூலம் பெற்றுக் கொடுத்துள்ளாா். இதன் மூலம் அவா் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 6.5 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ், நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் மாரிக்குமாா், முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன், மாநில அமைப்புச் செயலா் ராம்மோகன், மாநில துணைச் செயலா் செல்வராஜ், தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் டி.கேபாண்டியன், கடையம் வட்டார காங்கிரஸ் தலைவா் அழகுதுரை, மகளிா் அணித் தலைவி சீதாலட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவா் செல்லம்மாள், கீழப்பாவூா் எஸ்.கே.டி.பி.காமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.