லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தல்: 300 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது
பேரிடா் மீட்பு உபகரணங்கள்: காவல் துணை ஆணையா் ஆய்வு
பேரிடா் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாநகர ஆயுதப் படையில் பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்ட பேரிடா் மீட்பு படையினா் மற்றும் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) அனிதா பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
அப்போது, வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மின்சாரம் சம்பந்தமான பொருள்களை கையாளுதல், வெளியில் செல்லும் போது கவனமுடன் இருத்தல், ஆறு, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளுக்குச் செல்வதை தவிா்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்துமாறு மாநகர காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.