செய்திகள் :

`என்னதான் ஆறுதல் சொன்னாலும் உதயகுமாரை..!’ - உயிரிழந்த பாகரைத் தேடும் திருச்செந்தூர் கோயில் யானை

post image

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 18-ம் தேதி உதவி யானை பாகர் உதயகுமார், அவரது உறவினர் சிசு பாலன் ஆகியோரை தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். யானையை போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்து  துதிக்கையில் முத்தமிட்டதால் ஆக்ரோஷத்தில் சிசுபாலனை தாக்கியுள்ளது.

உயிரிழந்த உதவி பாகர் உதயகுமார்

அவரை காப்பாற்ற முயன்ற உதவி பாகர் உதயகுமாரையும் தாக்கிய காட்சி, யானைக்குடியில் உள்ள  சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் குழுவினரின் 24 மணி நேர தீவிர காண்காணிப்பில் யானை உள்ளது. சம்பவம் நடந்த அன்று தெய்வானை யானை சரியாக உணவு எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்தடுத்த நாட்களில் உணவு எடுத்துக் கொண்டது. தற்போது யானை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

யானை கால்களை அசைத்தல், துதிக்கையை தூக்கிக் காட்டுதல், தலையை அசைப்பது என வழக்கமான செய்கைகளை செய்யத் தொடங்கிவிட்டது. வழக்கமாக தினமும் சரவணப் பொய்கையில் தெய்வானை யானைக்கென்றே பிரத்தேயமாக  ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம்.

இயல்பு நிலைக்குத் திரும்பிய தெய்வானை

ஆனால், இச்சம்பவத்திற்குப் பிறகு யானைக் குடியிலேயே குளிப்பாட்டப்பட்டு வருகிறது. 5 நாட்கள் கண்காணிப்பிற்குப் பிறகு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. அதே நேரத்தில் சிறிது நாள்கள் முதுமலை அல்லது திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெய்வானை யானை உதவி பாகர் உதயகுமாரை தேடுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மற்றொரு பாகரான செந்தில்குமாரிடம் பேசினோம், “நான்கு பாகர்கள் தெய்வானையை ஷிப்ட்  முறையில் கவனித்துக் கொள்வோம்.

 இதில் உயிரிழந்த உதயகுமாரும் ஒருவர். இந்த யானை திருச்செந்தூருக்கு வரும் போது அதற்கு 6 வயது. தற்போது 26 வயதாகிறது. இங்கு வந்த நாள் முதல் உதயகுமார் யானையை எங்களுடன் கவனித்து வருகிறார். எங்களில் உதயகுமார் மீது யானை மிகவும் பாசமாக இருக்கும்.  அவர் சொல்வதை கிளிப்பிள்ளை போல கேட்கும். தனக்குப் பின்னால் வருவது உதவி பாகர் என்பதை உணராமல் தாக்கியுள்ளது.  சிறிது நேரத்தலேயே மண்டியிட்டு துதிக்கையால் உதயகுமாரை தட்டி எழுப்பி கண்ணீர் விட்டதை சி.சி.டி.வி காட்சிகளில் பார்த்துவிட்டு நாங்களே கண்ணீர் விட்டோம்.

யானைக் குடிலில் தெய்வானை

4 பாகர்களில் ஒருவர் தற்போது இல்லை என்பது தெய்வானைக்குப் புரிந்து விட்டது.  பெரும்பாலும் காலை உணவை உதயகுமார்தான்  கொடுப்பார். உறுமல் மற்றும் பாகரை அருகில் அழைப்பது போன்ற செய்கைகள் மூலம் உதயகுமாரை தேடுகிறது. ஒருவர் இல்லாத குறை இருக்கக்கூடாது என்பதற்காக  உதவியாக இன்னொரு பாகரை அழைத்து வந்திருக்கிறோம். என்னதான் செய்தாலும் ஆறுதல் சொன்னாலும் உதயகுமாரை தெய்வானை மறக்காது. யானைக்கும் பாகருக்குமான உறவு தாய் பிள்ளை உறவு போல.” என்றார்.   

பூர்வ ஜென்ம பரிகார பூஜை: எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு; திருவண்ணாமலையில் அரச இலை தீப வழிபாடு

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நன்னாளில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூ... மேலும் பார்க்க

துதிக்கையில் முத்தம்; செல்போனில் செல்ஃபி - திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியது எப்படி?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யான... மேலும் பார்க்க

'அசாம் டு திருச்செந்தூர்' - கோயில் யானை தெய்வானையின் பின்கதை!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நா... மேலும் பார்க்க

திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் - பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில்!

திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம்! பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில் 7-12-2024 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு வேண்டிய வரனும் சிறப்பான இல்லறமும் அமைத... மேலும் பார்க்க