ஊட்டி: கிலோ 20 ரூபாய் வரை போகும் முட்டைகோஸ்... அறுவடையில் விவசாயிகள் மும்முரம்!
ரூ. 69,100 சம்பளத்தில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
கொல்கத்தாவில் உள்ள இந்தியன் புள்ளியியல் கழகத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். REC-10/2024-3,KOL
பணி: Electrician A
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Operator cum Mechanic A(Lift)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் லிப்ட் ஆப்ரேட்டர் உரிமம் பெற்றிருப்பதுடன் ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
மேற்கண்ட பணிகளுக்கு வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் |வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.250. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் பஞ்சாப் நேஷல் வங்கி மூலம் செலுத்த வேண்டும். ஐபிஎஸ்சி எண்.PUNB0397700
விண்ணப்பிக்கும் முறை:www.isical.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief Executive(Administration & Finance), Indian Statistical Institute, 203, B.T.Road, Kolkata - 700 108
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 2.12.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.