வேதாரண்யம் பகுதியில் மந்தமான வானிலை
வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை மழையின்றி, வானிலை மந்தமான நிலையில் காணப்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. வியாழக்கிழமை காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யம் - 120.4 மி. மீ., தலைஞாயிறு -58.4 மி. மீ., கோடியக்கரை -167.4 மி. மீ. மழை பதிவானது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை தலைஞாயிறு 2.8 மி.மீ. மழை பெய்த நிலையில், மற்ற இடங்களில் நாள் முழுவதும் மந்தமான வானிலை நிலவியது. மழை இல்லாததால் வயல்களில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையைத் தொடா்ந்து, மீனவா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.