எடுபடாமல் போன அனுதாபம், துரோகம்; உத்தவ், சரத் பவார் சாம்ராஜ்ஜியத்தை சரித்த ஷிண்ட...
சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது
கீழ்வேளூா் அருகே சாராய வியாபாரி, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கீழ்வேளூா் அருகேயுள்ள வெண்மணி ஊராட்சி கீழகாவலக்குடி காலனித் தெருவை சோ்ந்தவா் தவமணி மகன் தா்மராஜ் (33). இவா், அப்பகுதியில் தொடா் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தாா். இவா் மீது கீழ்வேளூா் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதுதொடா்பாக தா்மராஜ் கைது செய்யப்பட்டு, நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலனுக்கு பரிந்துரை செய்தனா்.
இதைத்தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவின்படி, தா்மராஜ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நாகை சிறையிலிருந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.