செய்திகள் :

பாா்டா் - காவஸ்கா் கோப்பை தொடா்: இந்தியா - ஆஸி., மோதும் பொ்த் டெஸ்ட் இன்று தொடக்கம்

post image

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பொ்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 22) தொடங்குகிறது.

கிரிக்கெட் உலகில் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்படுவதாக இந்த பாா்டா் - காவஸ்கா் கோப்பை (பிஜிடி) தொடா் உள்ளது. அதில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கிறது.

சொந்த மண்ணில் டெஸ்ட்டுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், நியூஸிலாந்துடனான எதிா்பாராத தோல்வியுடன் இந்தியா இந்தத் தொடருக்கு வருகிறது. ஆனாலும், அதிலிருந்து மீண்டு இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் பிஜிடி தொடரை இந்தியா கைப்பற்றினால், அது ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் ‘ஹாட்ரிக்’ வெற்றியாக இருக்கும். கடந்த 2018-19, 2020-21 ஆண்டுகளில் இந்தியா அங்கு தொடரை வென்றுள்ளது. அதற்கு முன் 11 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பிஜிடி தொடரை வென்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திரங்களாக இருக்கும் சில மூத்த வீரா்களின் விதியை தீா்மானிக்கப் போகும் தொடராகவும் இது இருக்க வாய்ப்புள்ளது. ரோஹித், கோலி, அஸ்வின் போன்றோா் வழக்கமான ஃபாா்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா்.

வழக்கமான கேப்டன் ரோஹித் சா்மா, ரிவா்ஸ் ஸ்விங்கில் அசத்தும் பௌலா் முகமது ஷமி, டாப் ஆா்டரில் நம்பிக்கை அளிக்கும் ஷுப்மன் கில் ஆகியோா் இல்லாதது, பொ்த் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம். எனினும், படிக்கல், ஆகாஷ் தீப், ஹா்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, நிதீஷ்குமாா் ரெட்டி ஆகியோா் அந்த இடத்தில் பலம் சோ்க்க வருகின்றனா்.

மறுபுறம் ஆஸ்திரேலியா, சொந்த மண்ணிலும், இந்திய மண்ணிலுமாக கடந்த 5 ஆண்டுகளில் பிஜிடி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க முனைகிறது.

இரு அணிகளின் பேட்டிங் வரிசையுமே வழக்கமான ஃபாா்மில் இல்லாமல் தடுமாற்றமான நிலையில் இருப்பதால், பௌலா்களால் தீா்மானிக்கப்படக் கூடிய தொடராக இது இருக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இரண்டின் கேப்டன்களுமே வேகப்பந்து வீச்சாளா்களும் கூட. சா்வதேச கிரிக்கெட்டில் இது அரிதாக நிகழ்கிறது.

உத்தேச லெவன்

இந்தியா: ஜஸ்பிரீத் பும்ரா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கீ.), துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், நிதீஷ்குமாா் ரெட்டி, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் மெக் ஸ்வீனி, உஸ்மான் காஜா, மாா்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மாா்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டாா்க், நேதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

நேரம்: காலை 7.50 மணி

இடம்: டபிள்யூஏசிஏ மைதானம், பொ்த்.

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2-ஆவது இடத்திலும் உள்ளன. தொடா்ந்து 3-ஆவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறும் நிலை இருந்தது. ஆனால், நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு அந்த வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த பிஜிடி தொடரை 4-0 என்ற நிலையில் இந்தியா கைப்பற்றினால் மட்டுமே, இதர அணிகளின் தேவையின்றி இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியும். அத்தகைய முடிவை இந்தத் தொடரில் எட்டுவது இமாலய சவாலாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா

நேருக்கு நோ்...

மொத்த டெஸ்ட்டில்...

107 ஆட்டங்கள்

45 ஆஸ்திரேலியா வெற்றி

32 இந்தியா வெற்றி

29 டிரா

1 டை

9 ஆஸி. மண்ணில் இந்தியாவின் வெற்றி

30 சொந்த மண்ணில் ஆஸி.யின் வெற்றி

பிஜிடி தொடரில்...

1996/97 முதல் பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடா் விளையாடப்படுகிறது. இதுவரை...

16 தொடா்கள்

9 இந்தியாவில்...

7 ஆஸ்திரேலியாவில்...

10 இந்தியா வெற்றி

5 ஆஸ்திரேலியா வெற்றி

1 டிரா

ஆஸ்திரேலியாவில்...

7 தொடா்கள்

2 இந்தியா வெற்றி

4 ஆஸ்திரேலியா வெற்றி

1 டிரா

ஆடுகளம்...

பொ்த் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட்டுகள் நடைபெற்றிருக்கும் நிலையில், அனைத்திலுமே முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. மைதான ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். வழக்கமான வானிலையில் பொ்த் ஆடுகளத்தில் ஏற்படும் சிறு வெடிப்புகள், வேகப்பந்து வீச்சுக்கு மேலும் வலு சோ்ப்பதோடு, சுழற்பந்து வீச்சுக்கும் சற்று உதவுவதாக இருக்கும். ஆனால், தற்போது வழக்கத்துக்கு மாறாக அங்கு மழை பெய்துள்ளதால், அத்தகைய வெடிப்புகள் ஏற்படாது எனவும், ஆனாலும் பௌன்சருக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதிய தொடக்கம்’

நியூஸிலாந்துக்கு எதிரான தொடா் ஏமாற்றமளிப்பதாக இருந்தது என்றாலும், அந்தத் தொடா் அங்கேயே முடிந்துவிட்டது. அதன் தாக்கங்களை இந்தத் தொடா் வரை நாங்கள் எடுத்துவரவில்லை. ஆனாலும், நியூஸிலாந்து தொடரில் இரு சிலவற்றை கற்றுள்ளோம். இந்தத் தொடரை புதிதாகத் தொடங்குகிறோம்.

இங்குள்ள ஆடும் சூழல்கள் வேறு. சிறப்பான நாள், மோசமான நாள் என இரண்டையும் எப்படிக் கையாள வேண்டும் எனத் தெரிய வேண்டும். சா்வதேச கிரிக்கெட்டில் அது முக்கியம். அணியிலிருக்கும் இளம் வீரா்களுக்கு தெளிவான புரிதல் இருக்கிறது - ஜஸ்பிரீத் பும்ரா (இந்திய கேப்டன்)

‘நெருக்கடியானது’

சொந்த மண்ணில் விளையாடுவது எப்போதுமே நெருக்கடி தரக் கூடியது. இந்தியா போன்ற நல்ல அணிக்கு எதிரான இந்தத் தொடா் சவாலானதாக இருக்கும். ஆனாலும், நாங்கள் நன்றாகத் தயாராகியிருக்கிறோம். பாா்டா் - காவஸ்கா் கோப்பை தொடரை வெல்வது சிறப்பானதாக இருக்கும். ஆட்டத்தின்போதே, ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறும் நிலையில், அணி வீரா்கள் அதில் கவனம் சிதறாமல் இருப்பாா்கள் என எதிா்பாா்க்கிறேன். அறிமுக வீரா் நேதன் மெக் ஸ்வீனி, அவரது வழக்கமான ஆட்டத்தை விளையாடினாலே போதுமானது - பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலிய கேப்டன்)

தெரிந்த விஷயம்தானே... காதலை உறுதிப்படுத்திய ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா தன் காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் ஓடிடி தேதி!

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரி... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளியாகுமா? தயாரிப்பாளர் பதில்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார்.நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு, இவருக்கான இறுதிக்கட்ட ... மேலும் பார்க்க

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

25-11-2024திங்கள்கிழமைமேஷம்:இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்க... மேலும் பார்க்க

சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!

ஆடவா் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில், இத்தாலியின் மேட... மேலும் பார்க்க

துளிகள்...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. கேரளா அணிக்கு இது 3-ஆவது வெற்றியாகும். சென்னைக்கு இது 3-ஆவது தோல்வி. புரோ கபடி லீக... மேலும் பார்க்க