செய்திகள் :

லக்கி பாஸ்கர் ஓடிடி தேதி!

post image

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகைகையொட்டி அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது.

வங்கியில் பணிபுரியும் அதிகாரியான பாஸ்கர் (துல்கர் சல்மான்) பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் அரசை, வங்கி நிர்வாகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்கிற கதையாக உருவான இப்படம் இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க: குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளியாகுமா? தயாரிப்பாளர் பதில்!

குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.

இதுவே துல்கர் சல்மானின் முதல் ரூ. 100 கோடி வசூல் திரைப்படமாகும். சரியான பான் இந்திய நடிகர் என அடையாளப்படுத்தப்பட்ட துல்கர் சல்மான், தெலுங்கில் மகாநதி, சீதா ராமம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்கி பாஸ்கரிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவ. 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிந்த விஷயம்தானே... காதலை உறுதிப்படுத்திய ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா தன் காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளியாகுமா? தயாரிப்பாளர் பதில்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார்.நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு, இவருக்கான இறுதிக்கட்ட ... மேலும் பார்க்க

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

25-11-2024திங்கள்கிழமைமேஷம்:இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்க... மேலும் பார்க்க

சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!

ஆடவா் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில், இத்தாலியின் மேட... மேலும் பார்க்க

துளிகள்...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. கேரளா அணிக்கு இது 3-ஆவது வெற்றியாகும். சென்னைக்கு இது 3-ஆவது தோல்வி. புரோ கபடி லீக... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகர் தனபால் காலமானார்!

சென்னை: பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால்(95) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.தனது தனித்துவமான நடிபால் முத்திரையை பதித்துள்ள இவர், ரஜினி நடித்த நான் மகான் அல்ல படத்திலும், விஜயகாந்த் நடித்த சொக்க... மேலும் பார்க்க