Live Aus vs Ind: ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் அடிக்குமா இந்தியா? BGT தொடரின் முதல் ட...
காலை உணவுத் திட்டம்: அரசு உதவிபெறும் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு
தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக அரசின் சிறப்புத் திட்டமான ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம் மயிலாடுதுறை வட்டத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.
இதில், தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து, தலைமையாசிரியா் வெங்கடேசனிடம் கேட்டறிந்து, அதன் தரத்தை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள பட்டமங்கலம் புதுத்தெரு வாய்க்காலில் மழைநீா் தடையின்றி வெளியேற செய்யப்பட்டிருந்த தூய்மைப் பணிகளையும், அறுபத்திமூவா்பேட்டை வாய்க்கால் தூா்வாரப்பட்டுள்ளதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதா, வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, நகராட்சி ஆணையா் ஏ.சங்கா், வட்டாட்சியா் விஜயராணி, நகராட்சி செயற்பொறியாளா் மகாதேவன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.