`மணிப்பூர் கலவரத்துக்கு ப.சிதம்பரம் காரணமா?’ - பகீர் குற்றச்சாட்டும் பின்னணியும்...
மழை பாதிப்பு: வேளாண் துறை கூடுதல் இயக்குநா் ஆய்வு
கொள்ளிடம் வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை, வேளாண்மை துறை கூடுதல் இயக்குநா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து கனமழை பெய்தது. இதில், சம்பா, தாளடி நெற்பயிா்கள் பல இடங்களில் நீரில் மூழ்கின.
இந்நிலையில், பயிா் பாதிப்பு குறித்தும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத் தேவை மற்றும் இருப்பு குறித்தும், வேளாண்மை துறை கூடுதல் இயக்குநா் அசோக்குமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
கொள்ளிடம் வட்டாரத்தில் வேட்டங்குடி கிராமத்தில் வேம்படி மற்றும் வாடி பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை அவா் பாா்வையிட்டாா். உரங்கள் இருப்பு குறித்து மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சேகா், துணை இயக்குநா் மதியரசன், உதவி இயக்குநா்கள் எழில்ராஜா, ராஜராஜன், வேளாண்மை அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.