செய்திகள் :

Delhi Ganesh: ``மரணம் வரும்னு தெரியும், எப்போன்னு தெரியாதவரை நாம ராஜா'' -டெல்லி கணேஷ் நாஸ்டால்ஜியா!

post image

டெல்லி கணேஷ் எனும் ஓர் அற்புதமான நடிகரை திரைத்துறையும் ரசிகர்களும் இழந்து நிற்கிறார்கள். அவருடன் பணியாற்றிய பலரும் அவர் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னால் டாக்டர் விகடன் சேனலுக்காக, தன்னைப்பற்றி அவர் பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் இதோ உங்களுக்காக...

''என்னோட ஏர்ஃபோர்ஸ் லைஃபை மாடல் லைஃப்னு சொல்லலாம். அங்கதான் நான் டிசிப்ளின் கத்துக்கிட்டேன். ஒரு சீனியருக்கு எப்படி மரியாதைக் கொடுக்கணும்கிறதுல ஆரம்பிச்சி, நேரத்துக்கு வேலைபார்க்கிற இடத்துக்கு போகணும்கிற வரைக்கும் அங்கதான் கத்துக்கிட்டேன். பாகிஸ்தானோட சண்டை நடக்குறப்போ அப்போ நான் ஏர்ஃபோர்ஸ்ல இருந்தேன். அந்த நேரம் ஜம்மு காஷ்மீர்ல சாயங்காலம் 6 மணியில இருந்து காலையில 6 மணி வரைக்கும் எனக்கு டியூட்டி. வாழ்க்கையில எல்லாத்தையும் பார்த்தாச்சுங்கிற உணர்வை ஏற்படுத்தின நாள்கள் அதெல்லாம்.

`டெல்லி' கணேஷ்

இந்த உணர்வு என்னோட சினிமா ஃபீல்டுக்கும் உதவியா இருந்துச்சு. யார்கிட்டேயும் வாய்ப்புக் கேட்டது கிடையாது, வாய்ப்புக்காக யாருக்கும் ஜால்ரா போட்டதும் கிடையாது. நடிக்கக் கூப்பிட்டா போவேன்; அதுவும் கரெக்டான நேரத்துக்குப்போய் நடிச்சுக்கொடுத்திட்டு வந்திடுவேன். 'டெல்லி கணேஷ்' லேட்டா வந்தான்னு யாரும் சொல்ல முடியாது. மத்தபடி, கூட நடிக்கிற அத்தனை பேருக்கும் மரியாதை கொடுத்து அன்பா பழகுவேன். இதெல்லாம் ஏர்ஃபோர்ஸ்ல கத்துக்கிட்டதுதான்.

அந்த நிமிஷம் ட்ரிங்க்ஸ் பழக்கத்தை விட்டுட்டேன்..

மனுஷங்க நாம எல்லாருமே ஆசாபாசங்கள் உள்ளவங்கதான். உடம்புல ஏதாவது கோளாறு வந்தாதான் இந்த ஆசாபாசங்கள் குறையும். என்கிட்டேயும் சில கெட்டப்பழக்கங்கள் இருந்துச்சு. ஒரு தடவை என்னோட டாக்டர், 'ட்ரிங்க்ஸ் பழக்கம் இருக்கா'ன்னு கேட்டார். 'ஆமா'ன்னு சொன்னேன். 'எத்தன வருஷமா இருக்கு'ன்னு கேட்டார். '1964-ல இருந்து'ன்னு சொன்னேன். 'அடேங்கப்பா, உங்க லிவர் நல்லா இருக்கே'ன்னு சொன்னார். 'டாக்டர் நான் பயங்கர குடிகாரன் கிடையாது. எப்போவாவது கேஷூவலா குடிப்பேன்'னு சொன்னேன். 'ட்ரிங்க்ஸ்ல கேஷூவல் என்ன; பயங்கரம் என்ன...கெட்டப்பழக்கம் கெட்டப்பழக்கம்தான். அந்த சனியனை விட்டுத்தொலையுங்களேன்'னு சொன்னார். அவர் சொன்ன அந்த நிமிஷம் அந்தப் பழக்கத்தை விட்டுட்டேன். அதுக்கப்புறம் ஒருநாளும் நான் ட்ரிங்க் பண்ணதில்ல.

`டெல்லி' கணேஷ்

தினமும் நண்பர்களோட கே.கே நகர் சிவன் பார்க்ல வாக்கிங் போவேன். விடியற்காலையில ரோட்ல ஜன நடமாட்டம் அதிகமா இருக்காதுங்கிறதால, அந்த நேரத்துல மட்டும் நான் கார் ஓட்டுவேன். பார்க்ல வாக்கிங் முடிஞ்சதும், காரை ஓட்டிக்கிட்டு பக்கத்துல இருக்கிற சரவண பவனுக்குப் போய் காபி குடிச்சிட்டு வீட்டுக்குப் போயிடுவேன்.

உணவுப்பழக்கத்துல கவனமா இருக்கேன்...

உணவுப்பழக்கத்துல ரொம்ப கவனமா இருக்கேன். காலையில ரெண்டு தோசை சாப்பிட்டா பெரிய விஷயம். மதியம் கொஞ்சம் சாம்பார் சாதம், கொஞ்சம் தயிர் சாதம் இல்லைன்னா ரசம் சாதம், அவ்ளோதான். சாயங்காலம் சமோசா மாதிரி ஏதாவது ஸ்நாக்ஸ். நைட்டு மறுபடியும் தோசையும், கொஞ்சம்போல தயிர்சாதமும். நான் கல்யாண வீடுகள்ல சாப்பிடவே மாட்டேன்... ஏன் தெரியுமா? இலையில ஏகப்பட்ட ஐட்டங்கள் இருக்கும். அத்தனையும் சாப்பிட்டா வயித்துக்கு அவஸ்தையாகிடுமே. அதுக்காக, எதுவுமே சாப்பிடாம கிளம்பவும் முடியாது. அதனால, ரசத்தையும் பாயசத்தையும் ஒவ்வொரு டம்ளர் வாங்கிக் குடிச்சிட்டு வந்திடுவேன். மணமக்களோ பேரன்ட்ஸ், 'சாப்பாட்டீங்களா'ன்னு கேட்டா 'ரசம் சூப்பரா இருந்துச்சு; பாயசம் ஏ ஒன்'னு சொல்லிட்டு, வாழ்த்திட்டு வந்திடுவேன்.

`டெல்லி' கணேஷ்

தெரியாதவரைக்கும் நாமதான் ராஜா...

என்னோட மனநலத்தைப் பொறுத்தவரைக்கும், என்னோட மென்ட்டாலிட்டி பாசிட்டிவா இருக்கிறதால அதுல எந்தப் பிரச்னையும் வந்ததில்ல. இன்னொரு விஷயமும் சொல்லணும். இறந்துபோற மாதிரி சீன்ல நான் நடிக்கவே மாட்டேன். என்னைப் படுக்க வெச்சி மாலையைப் போடுறது, அழுவுறது... இதுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டேன். நீ தர்ற காசுக்கு இதெல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லிடுவேன். அப்போ காசு நிறைய கொடுத்தா பிணமா நடிக்கிறீங்களான்னு கேட்பாங்க. எவ்ளோ கொடுத்தாலும் பிணமா நடிக்க மாட்டேன்னு சொல்லிடுவேன். மரணத்து மேல பயமில்லன்னு யாராவது சொல்ல முடியுமா? மரணம் கட்டாயம் வரும்னு தெரியும். ஆனா, அது எப்போனு தெரியாதவரைக்கும் நாமதான் ராஜா.''

உங்களுடைய படங்கள் வழியாக என்றென்றும் எங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருப்பீர்கள் சார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

`ஜான்சி ராணி, நேதாஜி, சாவர்கர்' புதிய அவதாரத்தில் மீண்டும் சக்திமான் - முகேஷ் கண்ணா அறிவிப்பு!

சக்திமான்... 90-களில் பிறந்தவர்களுக்கு மறக்கமுடியாத தொடர்களில் ஒன்று. சக்திமான கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருப்பார். அந்தத் தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித... மேலும் பார்க்க

2025 கிராமி விருதுகளில் அதிக பிரிவுகளில் நாமினேஷன் ஆன கலைஞர்கள் - யார் யார்?

துரைத்துறையில் கொடுக்கப்படும் ஆஸ்கார் விருதுக்கு நிகரானது, இசை துறையை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் `கிராமி விருதுகள்’. 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலை தற்போது அறிவித்த... மேலும் பார்க்க

Delhi Ganesh : 'அற்புதமான மனிதர், நல்ல நடிகர்...' - ரஜினி, விஜய் டு அண்ணாமலை... இரங்கல் பதிவுகள்!

நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பதிவிட்டிரு... மேலும் பார்க்க

Delhi Ganesh `சத்யா அவள் தாத்தாவை மிஸ் செய்வாள்'- ஆடுகளம் தொடர் நாயகி டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷின் மறைவு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஆடுகளம்’ தொடரில் நடிகர் டெல்லி கணேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அந்தத் தொடரின் ப்ரொமோ சமீபத்தில் வெளிய... மேலும் பார்க்க

Ilaiyaraja: 'மீண்டும் மலையாள திரையுலகில்...' - ஐக்கிய அமீரகத்தில் விருப்பம் தெரிவித்த இளையராஜா

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வைரல் ஆகி வருகிறது. 1976-ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகம... மேலும் பார்க்க

`அமரன் படம் தவறாக சித்திரிக்கவில்லை; OTT-க்கு சென்சார்!' - சென்னையில் எல்.முருகன் பேச்சு

கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக சென்னை எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கலைப்புலி தாணு, இயக்குநர் செல்வமணி உள்ளி... மேலும் பார்க்க