செய்திகள் :

Kanguva FDFS: `படம் பார்த்தவங்க, கங்குவா மிகப்பெரிய வெற்றினு சொல்றாங்க' - இயக்குநர் சிவா

post image
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும்'கங்குவா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

2022ம் ஆண்டு வெளியான 'எதற்கும் துணிந்தவன்', லோகேஷின் 'விக்ரம்' ரோலக்ஸ் கேமியோவிற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் `கங்குவா' படத்தின் முதல் காட்சியை இன்று அதிகாலை முதலே கொண்டாடி தீர்த்து வருகின்றனர். கேரளா, ஆந்திரா, தெலங்கானா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்காவில் இரவே இப்படத்தின் முதல் காட்சி வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் பலர் படத்தின் பிரமாண்ட தயாரிப்பை, சூர்யாவின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம் திரைக்கதை மற்றும் படமாக்கிய விதம் குறித்தும் விமர்சித்து வருகின்றனர்.

கங்குவா

இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சென்னை, காசி திரையரங்கில் 'கங்குவா' படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக உற்சாகத்துடன் வந்திருக்கின்றனர் இயக்குநர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர். அப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசியிருக்கும் 'கங்குவா' இயக்குநர் சிவா, "அமெரிக்காவில் முதல் காட்சியைப் பார்த்தவர்கள், படம் பார்த்த நண்பர்கள் ஃபோன் பண்ணாங்க. மிகப்பெரிய வெற்றிப் படம்னு சொல்றாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.

'கங்குவா' படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி, "இரண்டு ஆண்டு கால உழைப்பு இப்போது திரைக்கு வந்திருக்கிறது. கேரளா, ஆந்திரா, வெளிநாட்டுல முன்னாடியே முதல் ஷோ ரீலீஸாகிருச்சு. படம் பார்த்தவங்க, 'ரொம்ப நல்லா இருக்குனு' பாராட்டுறாங்க. மிகப்பெரிய வெற்றிப்படம்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் 9 மணிக்குத்தான் முதல் ஷோ. ரசிகர்களோட அதைப் பார்க்க வந்திருக்கோம். தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு தந்து கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Inbox 2.0 Ep 9: Kanguva படம் பார்த்தவங்க இந்த வீடியோவையும் பாருங்க! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 9 இப்போது வெளிவந்துள்ளது.முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

AR Rahman: `நண்பர்களே, முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன்' - ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், உலக நீரிழிவு தினத்தையொட்டி (நவம்பர் 14) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.அந்தப் பதிவில், ``நண்... மேலும் பார்க்க

கங்குவா விமர்சனம்: சத்தியத்தைக் காக்கப் போராடும் சூர்யா; ஆனால் இந்தத் திரைக்கதையை யார் காப்பது?

இரண்டு காலவரிசையில் நடக்கும் கதையில் 2024-ம் ஆண்டில் குற்றவாளிகளை ரகசியமாகப் போலீசுக்குக் கண்டுபிடித்துத் தரும் 'பவுன்ட்டி ஹண்டராக' இருக்கிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில் இந்திய எல்லைப... மேலும் பார்க்க

Bloody Beggar: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தாரா நெல்சன்? - உண்மையில் நடந்தது என்ன?

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிளடி பெக்கர்' (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ... மேலும் பார்க்க